Friday, October 7, 2011

ஒரு எலுமிச்சை பழமும் ஒன்பது பச்சைமிளகாய்களும்...

பல அலுவலகங்களில் வெள்ளிகிழமைகளில் ஒரு எலுமிச்சை பழத்தையும் ஒன்பது பச்சைமிளகாய்களையும் ஒரு நூலில் கோர்த்து வாசலில் கட்டி வைப்பதை பார்கிறேன்... மேலும் ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி அதில் குங்குமத்தை தடவி வாசலில் வைக்கிறார்கள் இவை ஏன் என்று கேட்டால் தொழில் நன்றாக நடப்பதற்க்கு என்று கூறுகிறார்கள்...

ஒரு தொழில் நன்றாக நடப்பதற்க்கு...

அந்த தொழிலை நடத்துபவர் நேர்மையானவராக இருக்க வேண்டும்,

சொன்ன சொல்லை காப்பவராக இருக்க வேண்டும்,

தன்னை நம்பி வருபவர்களின் நிலையை உணர்ந்தவராக இருக்க வேண்டும்,

தன்னிடம் வேலை பார்பவர்களிடம் முறையான communication கொள்பவராக இருக்க வேண்டும்,

தன்னிடம் வேலை செய்பவர்கள் ஒழுங்காகதான் வேலை செய்கிறார்களா? (அல்லது இது போல் பதிவு போட்டு கொண்டிருக்கிறார்களா?) அவர்கள் செய்யும் வேலையால் company என்ன பயன் அடைகிறது என்றெல்லாம் கவணிப்பவராக இருக்க வேண்டும்,

வேலையாட்களின் யோசனைகளையும் அவர்களின் குறைகளையும் செவிமடுப்பவராக இருக்க வேண்டும்,

தன் Company யின் ethics என்ன என்ன என்கிற தெளிவு உடையவராக இருக்க வேண்டும்,

Company வளர்ச்சியை நோக்கி போகிறதா என்று கவணிப்பவராக இருக்க வேண்டும்,

உழைப்பு, முயற்ச்சி, மற்றவர்களை புரிந்து கொள்ளுதல் - இத்தகைய குணங்களை கொண்டவராக இருக்க வேண்டும்,

இவை எல்லாம் ஒரு தொழிலை (company) முன்னேற்றும் என்று கூறினால் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது...

ஆனால்...

இவை எதுவும் இல்லாமல் ஒரு எலுமிச்சை பழமும் ஒன்பது பச்சைமிளகாய்களும் ஒரு தொழிலை முன்னேற்றும் என்று கூறினால் அது எப்படி என்று எவ்வளவு யோசித்தாலும் எனக்கு புரிய மாட்டேன்கிறது...

மனக் குருடு...

மற்றவர்களின் கஷ்டங்களை புரிந்து கொள்ளாதவர்களை,
அடுத்தவர்கள் பற்றி அக்கறையில்லாதவர்களை,
செய்யும் வேலையில் அசட்டையாய் இருப்பவர்களை,
மற்றவர்களின் உழைப்பை சுரண்டி அதில் கொழுத்து போவோர்களை,
அவர்களின் விசுவாசிகளை,
தங்களுக்கு லாபம்தரும் விதிகளை மட்டும் கடைபிடிப்பவர்களை,
அதை மிக பெருமையாக கூறி கொள்பவர்களை,
தங்களின் சொரனை அற்ற தன்மைக்கு பொறுமை என்று பெயரிடுபவர்களை,
எல்லாம் தெரிந்த புத்திசாலிகளை போல் பேசும் முட்டாள்களை,
நியாயவான்களை போல் பேசும் அயோக்கியர்களை,
தங்களுடைய தவறுகளை சமாளிக்க வீணான நம்பிக்கைகளை தருபவர்களை,
தங்களுடைய தவறுகள் குறித்து எந்த விதமான குற்ற உணர்ச்சியும் இல்லாதவர்களை,

இவர்கள் எல்லோரையும் நான் (மிக அதிகமாகவே) வெறுக்கிறேன்...

நிறக்குருடு (Colour blindness) என்பது மனிதர்களில் சிலரால் பெரும்பாலானவர்களைப்போல சில நிறங்களுக்கிடையேயானவேறுபாடுகளை உணர இயலாமையைக் குறிக்கும் சொல்.

Friday, July 22, 2011

துன்பம் நேர்கையில்...

துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா? எனக்கு இன்பம் சேர்க்க மாட்டாயா? என்ற இந்த பாடல் பாரதிதாசனால் எழுதப்பட்டது. இந்த பாடலுக்கு “தேஷ்” ராகத்தில் வர்ண மெட்டு அமைக்க தனக்கு இரண்டு வருடங்கள் ஆனாதாக திரு. தண்டபாணி தேசிகர் கூறியுள்ளார். ஏனென்றால் இந்த பாடலின் ஜீவனுக்கு பங்கம் ஏற்படாமல் பாட வேண்டுமானால் அதற்கேற்ற (மென்மையான) ராகம் தேவை. இதே பாடலை “அடனா” ராகத்தில் பாடினால் அது குழந்தையை பயமுறுத்துவதாக அமைந்துவிடும் என்று அவர் நகைசுவையோடு குறிப்பிடுகிறார். எனவே இதற்கான சரியான ராகத்தை தான் கண்டு கொள்ள இரண்டு வருடம் எடுத்து கொண்டதாக கூறுகிறார்.

இரண்டு வருடம் ஒரு பாடலுக்காக சிந்தித்துள்ளார் என்றால் அவர் அவருடைய கலையின் மேல் எவ்வளவு தீவிர பற்று வைத்திருப்பவராக இருந்திருக்க வேண்டும். எனக்கெல்லாம் ஒரு சாதாரண விசையத்தை செய்வதற்கே அலுப்பு தட்டி விடுகிறது. அப்படி இருக்க இரண்டு வருட காலங்கள் ஒரு பாடலுக்கு ராகம் அமைக்க எடுத்து கொண்டார் என்றால் அவருடைய உழைப்புதான் எத்தகையது. அவருடைய அர்பணிப்புதான் எத்தகையது.
மனதை, ஒரு பொருளின் மேலோ அல்லது ஒரு விசையத்தின் மேலோ தொடர்ந்து செலுத்துவதற்க்கு ஒரு தனி ஈடுபாடு தேவைப்படுகிறது. ஒரு அர்பணிப்புணர்வு தேவைப்படுகிறது. அத்தகைய உணர்வுகள் இல்லாதவர்களுக்கு எந்த விசையத்திலும் கற்று கொள்ள ஆர்வமோ, சாதனைக்கான முயற்ச்சியோ இல்லாமல் போகிறது.

கற்று கொள்பவனை சாதகன் என்று நாம் சொல்லுகின்றோம். எதை கற்று கொண்டாலும் அதை முழு மனதுடனும், அர்பணிப்புணுர்வுடனும் கற்று கொண்டால் அந்த கலை சாதகனுக்கு கைவசமாகிறது. மனதை எவ்வாறு முழுமையாக ஈடுப்படுத்துவது என்பது கேள்வியாக இருக்கும் பட்சத்தில் சாதகன் அதையும் கற்று கொள்ள வேண்டிய நிலையிலேயே இருக்கின்றான்.

Saturday, July 16, 2011

சாரு பதில்கள்

சுகுமார் R


கேள்வி: இலக்கியம் கீழ்மையைக் கற்றுத் தருகிறதா? அல்லது, எனக்குள் உள்ள கீழ்மையை அடையாளம் கண்டு கொள்ள உதவுகிறதா?

பதில்: சுகுமார், இதே கேள்வியை சற்று மாற்றிக் கேட்டுப் பார்ப்போம். உலகில் சிலர் தங்களை எரியூட்டிக் கொண்டு மாண்டு போகிறார்கள். சிலர் மற்றவர்கள் மீது மண்ணெண்ணெயை ஊற்றிக் கொல்கிறார்கள். தமிழ்நாட்டில் இதுபோல் பல வரதட்சணைக் கொலைகள் நடந்துள்ளன. அப்படியானால் நெருப்பு ஒரு அழிவு சக்தியா? இலக்கியமும் அதைப் போன்றதுதான். யார் எப்படிப் பயன்படுத்துகிறார்களோ அதைப் பொறுத்து அமைகிறது அதன் வினை. சிலர் தங்களுடைய வாசிப்பு அறிவை ஒரு பயங்கர ஆயுதமாகப் பயன்படுத்துவதைக் கண்டிருக்கிறேன். இதில் இன்னொரு முக்கியமான விஷயமும் இருக்கிறது. இலக்கியம் உங்களுக்குள் அறிவாக சேகரம் ஆகிறதா அல்லது ஞானமாகவா? ஞானமாக சேகரமானால் நாம் மேலும் மேலும் பண்படுவோம். அப்படி அல்லாமல் அறிவாக மட்டுமே சேகரமானால் அந்த அறிவு மற்றவர்களையும் நம்மையும் சேர்த்து அழித்து விடும். உங்கள் இரண்டாவது கேள்விக்கும் இதிலேயே பதில் இருக்கிறது.


http://www.vallinam.com.my/issue28/charubathilgal.html

Saturday, June 18, 2011

தத்துவங்கள் அளிக்காத விழிப்பை கவிதை அளித்து விடுகிறது...

Thursday, March 3, 2011

சாரு பதில்கள்

எனவே சுகுமார், புத்திஜீவி ஆவது பற்றியெல்லாம் யோசிக்க வேண்டாம். எல்லாத் துறைகளிலும் அயோக்கியர்களும் நல்லவர்களும் உள்ளனர். இஸ்ரோவில் நடந்திருக்கும் ஊழல் இரண்டு லட்சம் கோடி என்கிறார்கள். அதில் ஈடுபட்டுள்ள எல்லோரும் வானளாவப் படித்தவர்கள். வாசிப்பு என்பது நெருப்பைப் போன்றது. நல்லவனிடம் கிடைத்தால் அகல் விளக்கை ஏற்றி இருட்டில் ஒளி ஏற்றுவான்; தீயவனிடம் கிடைத்தால் அதையே ஆயுதமாகப் பயன்படுத்தி நாட்டையும் வீட்டையும் கொளுத்துவான்.

http://www.vallinam.com.my/issue27/charubathilgal.html

Thursday, December 23, 2010

http://charuonline.com/blog/?p=1545

http://charuonline.com/blog/?p=1545
உங்களின் பணி இன்றும் உறவுகளின் மீதான மூடநம்பிக்கையுடன் வாழும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆணுக்கும் மிகவும் தேவை. ஆண்களால் நூற்றாண்டுகளாக உருவாக்கப்பட்ட கலாச்சாரம் என்ற ஆளுவதற்கான போலி ஆயுதத்தில் இருந்து இளைஞர்கள் மீள சாரு தேவை.