Friday, July 9, 2010

என் (பழைய) கவிதைகளில் சில...

உறவுகளின் பகிர்தல்களும் புரிதல்களும்

நலமா?
ம்...நலம்
தாங்கள்?
நானும்
வேலை எப்படி?
பராவாயில்லை
இதுதான் கடைசி வருட படிப்பு அப்படித்தானே?
ஆமாம்
எப்படி போகிறது?
போகிறது
டீ
இது என்ன?
பரிசு
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளோடு
பிரிக்கப்பட்டது
நாவலா?
ஆமாம்
யாராவது நாவல் போய் பிரசண்ட் பன்னுவாங்களா? பக்கத்தில் கேள்வி
ஏன் பன்ன கூடாதா? மறு கேள்வி
புரட்டப்பட்டது
இவ்வளவு விலையா?
......ம்...
எதுக்கு?
நல்லாயிருக்கும்
...ம்...ம்...
டீ.வி
சாப்பாடு எப்படி?
...ம்..சூப்பர்...
அவனுக்கு காரம் அதிகம் ஆகாது - மாமா
அதனால்தான் பார்த்து சமைச்சேன்
நெகிழ்வு
இரவு மணி ஏழு
அப்போ...நான்...கிளம்பறேன்
சரி...அடிக்கடி...போன்...பன்னு
சரி
வானம்
சாலை
பேருந்து.
*

உந்தன் இருப்பு என்பது எப்படி
எந்தன் இருப்போடு இணையும் சரிசமமாகும்?

நீ நீயாக இருக்கும் பொழுது
நான் மட்டும் ஏன்
யாராகவோ இருக்க வேண்டும்?

உனக்கும் எனக்குமான உறவு
சிநேகம் என்கிற
பரஸ்பரம்தான்...

அப்படியிருக்க...
சிநேகத்தில் ஏன் மாதிரிகள்?

நீ நீயாக இருக்கிறாய்
சந்தோஷம்

நான் நானாக இருப்பதற்க்கு
நீ சந்தோஷப்பட்டால்
நல்லது.
*

ஒரு மனிதன்
ஒரு நாய்குட்டி
ஒரே ஒரு செருப்பு...

சரிதான் போ கடவுளே...
நான் எப்போதும்
நான்தான்
*

நீ
நிஜம் என்றால்...
நானும் நிஜம்தான்
பொய் சொன்னது...
*

No comments:

Post a Comment