Friday, July 22, 2011

துன்பம் நேர்கையில்...

துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா? எனக்கு இன்பம் சேர்க்க மாட்டாயா? என்ற இந்த பாடல் பாரதிதாசனால் எழுதப்பட்டது. இந்த பாடலுக்கு “தேஷ்” ராகத்தில் வர்ண மெட்டு அமைக்க தனக்கு இரண்டு வருடங்கள் ஆனாதாக திரு. தண்டபாணி தேசிகர் கூறியுள்ளார். ஏனென்றால் இந்த பாடலின் ஜீவனுக்கு பங்கம் ஏற்படாமல் பாட வேண்டுமானால் அதற்கேற்ற (மென்மையான) ராகம் தேவை. இதே பாடலை “அடனா” ராகத்தில் பாடினால் அது குழந்தையை பயமுறுத்துவதாக அமைந்துவிடும் என்று அவர் நகைசுவையோடு குறிப்பிடுகிறார். எனவே இதற்கான சரியான ராகத்தை தான் கண்டு கொள்ள இரண்டு வருடம் எடுத்து கொண்டதாக கூறுகிறார்.

இரண்டு வருடம் ஒரு பாடலுக்காக சிந்தித்துள்ளார் என்றால் அவர் அவருடைய கலையின் மேல் எவ்வளவு தீவிர பற்று வைத்திருப்பவராக இருந்திருக்க வேண்டும். எனக்கெல்லாம் ஒரு சாதாரண விசையத்தை செய்வதற்கே அலுப்பு தட்டி விடுகிறது. அப்படி இருக்க இரண்டு வருட காலங்கள் ஒரு பாடலுக்கு ராகம் அமைக்க எடுத்து கொண்டார் என்றால் அவருடைய உழைப்புதான் எத்தகையது. அவருடைய அர்பணிப்புதான் எத்தகையது.
மனதை, ஒரு பொருளின் மேலோ அல்லது ஒரு விசையத்தின் மேலோ தொடர்ந்து செலுத்துவதற்க்கு ஒரு தனி ஈடுபாடு தேவைப்படுகிறது. ஒரு அர்பணிப்புணர்வு தேவைப்படுகிறது. அத்தகைய உணர்வுகள் இல்லாதவர்களுக்கு எந்த விசையத்திலும் கற்று கொள்ள ஆர்வமோ, சாதனைக்கான முயற்ச்சியோ இல்லாமல் போகிறது.

கற்று கொள்பவனை சாதகன் என்று நாம் சொல்லுகின்றோம். எதை கற்று கொண்டாலும் அதை முழு மனதுடனும், அர்பணிப்புணுர்வுடனும் கற்று கொண்டால் அந்த கலை சாதகனுக்கு கைவசமாகிறது. மனதை எவ்வாறு முழுமையாக ஈடுப்படுத்துவது என்பது கேள்வியாக இருக்கும் பட்சத்தில் சாதகன் அதையும் கற்று கொள்ள வேண்டிய நிலையிலேயே இருக்கின்றான்.

Saturday, July 16, 2011

சாரு பதில்கள்

சுகுமார் R


கேள்வி: இலக்கியம் கீழ்மையைக் கற்றுத் தருகிறதா? அல்லது, எனக்குள் உள்ள கீழ்மையை அடையாளம் கண்டு கொள்ள உதவுகிறதா?

பதில்: சுகுமார், இதே கேள்வியை சற்று மாற்றிக் கேட்டுப் பார்ப்போம். உலகில் சிலர் தங்களை எரியூட்டிக் கொண்டு மாண்டு போகிறார்கள். சிலர் மற்றவர்கள் மீது மண்ணெண்ணெயை ஊற்றிக் கொல்கிறார்கள். தமிழ்நாட்டில் இதுபோல் பல வரதட்சணைக் கொலைகள் நடந்துள்ளன. அப்படியானால் நெருப்பு ஒரு அழிவு சக்தியா? இலக்கியமும் அதைப் போன்றதுதான். யார் எப்படிப் பயன்படுத்துகிறார்களோ அதைப் பொறுத்து அமைகிறது அதன் வினை. சிலர் தங்களுடைய வாசிப்பு அறிவை ஒரு பயங்கர ஆயுதமாகப் பயன்படுத்துவதைக் கண்டிருக்கிறேன். இதில் இன்னொரு முக்கியமான விஷயமும் இருக்கிறது. இலக்கியம் உங்களுக்குள் அறிவாக சேகரம் ஆகிறதா அல்லது ஞானமாகவா? ஞானமாக சேகரமானால் நாம் மேலும் மேலும் பண்படுவோம். அப்படி அல்லாமல் அறிவாக மட்டுமே சேகரமானால் அந்த அறிவு மற்றவர்களையும் நம்மையும் சேர்த்து அழித்து விடும். உங்கள் இரண்டாவது கேள்விக்கும் இதிலேயே பதில் இருக்கிறது.


http://www.vallinam.com.my/issue28/charubathilgal.html