Saturday, July 16, 2011

சாரு பதில்கள்

சுகுமார் R


கேள்வி: இலக்கியம் கீழ்மையைக் கற்றுத் தருகிறதா? அல்லது, எனக்குள் உள்ள கீழ்மையை அடையாளம் கண்டு கொள்ள உதவுகிறதா?

பதில்: சுகுமார், இதே கேள்வியை சற்று மாற்றிக் கேட்டுப் பார்ப்போம். உலகில் சிலர் தங்களை எரியூட்டிக் கொண்டு மாண்டு போகிறார்கள். சிலர் மற்றவர்கள் மீது மண்ணெண்ணெயை ஊற்றிக் கொல்கிறார்கள். தமிழ்நாட்டில் இதுபோல் பல வரதட்சணைக் கொலைகள் நடந்துள்ளன. அப்படியானால் நெருப்பு ஒரு அழிவு சக்தியா? இலக்கியமும் அதைப் போன்றதுதான். யார் எப்படிப் பயன்படுத்துகிறார்களோ அதைப் பொறுத்து அமைகிறது அதன் வினை. சிலர் தங்களுடைய வாசிப்பு அறிவை ஒரு பயங்கர ஆயுதமாகப் பயன்படுத்துவதைக் கண்டிருக்கிறேன். இதில் இன்னொரு முக்கியமான விஷயமும் இருக்கிறது. இலக்கியம் உங்களுக்குள் அறிவாக சேகரம் ஆகிறதா அல்லது ஞானமாகவா? ஞானமாக சேகரமானால் நாம் மேலும் மேலும் பண்படுவோம். அப்படி அல்லாமல் அறிவாக மட்டுமே சேகரமானால் அந்த அறிவு மற்றவர்களையும் நம்மையும் சேர்த்து அழித்து விடும். உங்கள் இரண்டாவது கேள்விக்கும் இதிலேயே பதில் இருக்கிறது.


http://www.vallinam.com.my/issue28/charubathilgal.html

No comments:

Post a Comment