இரண்டு வருடம் ஒரு பாடலுக்காக சிந்தித்துள்ளார் என்றால் அவர் அவருடைய கலையின் மேல் எவ்வளவு தீவிர பற்று வைத்திருப்பவராக இருந்திருக்க வேண்டும். எனக்கெல்லாம் ஒரு சாதாரண விசையத்தை செய்வதற்கே அலுப்பு தட்டி விடுகிறது. அப்படி இருக்க இரண்டு வருட காலங்கள் ஒரு பாடலுக்கு ராகம் அமைக்க எடுத்து கொண்டார் என்றால் அவருடைய உழைப்புதான் எத்தகையது. அவருடைய அர்பணிப்புதான் எத்தகையது.
மனதை, ஒரு பொருளின் மேலோ அல்லது ஒரு விசையத்தின் மேலோ தொடர்ந்து செலுத்துவதற்க்கு ஒரு தனி ஈடுபாடு தேவைப்படுகிறது. ஒரு அர்பணிப்புணர்வு தேவைப்படுகிறது. அத்தகைய உணர்வுகள் இல்லாதவர்களுக்கு எந்த விசையத்திலும் கற்று கொள்ள ஆர்வமோ, சாதனைக்கான முயற்ச்சியோ இல்லாமல் போகிறது.
கற்று கொள்பவனை சாதகன் என்று நாம் சொல்லுகின்றோம். எதை கற்று கொண்டாலும் அதை முழு மனதுடனும், அர்பணிப்புணுர்வுடனும் கற்று கொண்டால் அந்த கலை சாதகனுக்கு கைவசமாகிறது. மனதை எவ்வாறு முழுமையாக ஈடுப்படுத்துவது என்பது கேள்வியாக இருக்கும் பட்சத்தில் சாதகன் அதையும் கற்று கொள்ள வேண்டிய நிலையிலேயே இருக்கின்றான்.
No comments:
Post a Comment